கேரளா:இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறில் உள்ள மூண்டகயம் என்ற இடத்தில் இன்று (ஜூலை04) காலை யானைகள் கூட்டம் அபிஷ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து தென்னை ,ஏலக்காய் செடிகளை சூறையாடியது.
சுமார் இரண்டு மணி நேரம் அங்கு முகாமிட்டிருந்த யானைக்கூட்டம் பின்னர் வனப்பகுதிக்குள் செல்ல முயன்றது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்சாரவேலியில் குட்டியானை ஒன்று மாட்டிக் கொண்டது. மின்சார வேலியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த குட்டி யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.