தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூணாறில் கடும் நிலச்சரிவு – 80 பேர் வரை காணவில்லை; 5 பேர் சடலமாக மீட்பு! - Tamilnadu peoples lived in kerala

மூணாறு ராஜமலை அருகேயுள்ள பெட்டிமுடி எனும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு சிக்கியது. இதில் சுமார் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கக் கூடும் எனத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

munnar landslide
munnar landslide

By

Published : Aug 7, 2020, 12:45 PM IST

இடுக்கி:நிலச்சரிவில் சிக்கிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இவற்றில் கனமழை காரணமாக, இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இச்சூழலில் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் நேற்று நள்ளிரவு (ஆகஸ்ட் 6) கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

மூணாறு ராஜமலை அருகேயுள்ள 'பெட்டிமுடி' எனும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் இருந்தன. இதில் சுமார் 80க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் சிக்கியிருக்கக் கூடும் என முதற்கட்டத் தகவல்கள் வெளியாகின. இவ்வேளையில் தற்போது ஐந்து பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நீலகிரியில் நிலச்சரிவு: பொதுமக்கள் வெளியேற்றம்!

மூணாறில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால், பெரியவாரை பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் செல்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதற்காக மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தைப்போன்று, மீண்டும் ஒரு இயற்கைப் பேரிடரால் உயிரிழப்புகள் உண்டாகக் கூடும் சூழல் உருவாகியுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details