தேனி:டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்திருந்தனர்.
அதனடிப்படையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணக்குமார், முன்னாள் பெரியகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் தலைமையில் நகரின் முக்கிய வீதிகளில் திறக்கப்பட்டிருந்த கடைகளை அடைத்து வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கூறிவந்தனர்.
இதைத்தொடர்ந்து, பெரியகுளம் தென்கரை, மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளை வியாபாரிகள் அடைக்கத் தொடங்கினர்.
வியாபாரிகளை கடையை அடைத்து ஆதரவளிக்க வேண்டிய திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்பட 30க்கும் மேற்பட்டோரை பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான காவலர்கள் கைது செய்தனர்.