தேனி மாவட்டத்தில் இதுவரை 96 பேர் கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 51 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும், போடி மாவட்டத்தைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சின்னமனூர் அருகேயுள்ள ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்தார். கோயம்பேட்டில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தவருடன் தொடர்பில் இருந்ததையடுத்து இவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, கடந்த 10ஆம் தேதிமுதல் சிகிச்சைப் பெற்றுவந்தார்.