தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. வைகை அணை நீர்த்தேக்கத்தில் மீன்வளத்தைப் பெருக்கும் வகையில் மீன்வளத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் மீன்குஞ்சுகள் விடப்படுகிறது. இந்த ஆண்டில் வைகை அணையில் விடுவதற்காக கட்லா, ரோகு, மிருகால் வகையைச் சேர்ந்த சுமார் ஆறு லட்சம் மீன்குஞ்சுகள் மீன் வளர்ப்புப் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்தது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு வைகை அணையில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்! - vaigai dam
தேனி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு மீன்வளத்தைப் பெருக்கும் வகையில், வைகை அணை நீர்த்தேக்கத்தில் சுமார் ஆறு லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
6 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
இந்நிலையில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு அந்த மீன்குஞ்சுகளை ஆற்றில் விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மீனவர்கள் வைகை அணை நீர்த்தேக்கத்தில் உள்ள பாண்டி முனீஸ்வரன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், பண்ணைகளிலிருந்த பேரல்களில் கொண்டு வரப்பட்ட மீன்குஞ்சுகளை நீர்த்தேக்கத்திற்குள் விட்டனர்.
மேலும், மீன்குஞ்சுகளை வைகை அணை நீர்த்தேக்கக்தில் விட்டுள்ளதால், மீனவர்கள் சிறிய துளைகள் கொண்ட வலைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.