தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்வாயில் உடைப்பு: விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேனி: வைகை அணையிலிருந்து 58ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் உசிலம்பட்டி விவசாயிகள் நீரில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
58th canal usilai farmers protest

By

Published : Dec 6, 2019, 1:47 PM IST

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தேனி மாவட்டத்தில் சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆண்டிபட்டி அருகேயுள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து, 68.50 அடியாக உள்ளது. இத்தருணத்தில் வைகை அணையிலிருந்து 58ஆம் கால்வாய்ப் பகுதிக்கு தண்ணீர் திறக்கக்கோரி உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கடையடைப்பு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து நேற்று 58ஆம் கால்வாய்ப் பகுதியிலிருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனிடையே இன்று அதிகாலை ஆண்டிபட்டி அருகே உள்ள டி.புதூர் என்னும் இடத்தில் 58ஆம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பு காரணமாக தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.

பவானி கூடுதுறை ஆற்றில் குதித்த பெண் மீட்பு!

இதனையறிந்த உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கால்வாய் உடைந்த பகுதியிலிருந்து மாநில அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு கால்வாய் உடைந்த பகுதியை பொதுப்பணித்துறையினர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் 2018ஆம் ஆண்டு 58ஆம் கால்வாயில் சோதனை ஓட்டத்திற்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டபோது, அதே பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. பின்னர் அதனை சரிசெய்து 110 கன அடியாக தண்ணீரின் அளவை குறைத்து கால்வாயில் திறந்து விடப்பட்டது. அப்போது உசிலம்பட்டி பகுதியில் தொட்டிப்பாலம் எனுமிடத்தில் உடைப்பு ஏற்பட்டது.

விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தற்போதும் உடைப்பு ஏற்பட்டதால் 58ஆம் கால்வாய்ப் பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும் மண் கால்வாயை அகற்றி சிமெண்டில் கால்வாய் அமைத்துத்தர வேண்டுமென்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details