தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி - டெல்லி சென்று 5 பேரை கைது செய்த தேனி போலீஸ்! - 5 people from North state money fraud

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தேனியை சேர்ந்த பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி- வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது!
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி- வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது!

By

Published : Feb 12, 2023, 6:18 PM IST

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி - டெல்லி சென்று 5 பேரை கைது செய்த தேனி போலீஸ்!

தேனி:போடிநாயக்கனூர் அருகில் உள்ள கீழசொக்கநாதபுரம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் செல்போனுக்கு விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக குறுந்தகவல் வந்தது. இதனை உண்மை என நம்பிய அந்தப் பெண், தனது மகனுக்கு இந்த வேலையை வாங்கித் தருமாறு கூறவே, அதற்கு அந்த கும்பல் ரூ.9 லட்சம் வரை கேட்கவே இந்த பெண்ணும் அவர்களுக்கு பணத்தை அனுப்பியுள்ளார். இதையடுத்து அப்பெண் சம்மந்தபட்ட அனைவரின் செல்போன் எண்கள் சுவிட்ச்ஆப் செய்யபட்டிருப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து அவர் தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்ததின்பேரில், இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நவீன டெக்லானஜி உதவியுடன் அவர்களை கண்டறியும் பணியில் இறங்கினார்கள்.

அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்த காவல் துறையினர் இதற்காக டெல்லி சென்று, அங்கிருந்த ராஜா, ராதாகிருஷ்ணன், அப்துல் சமது, ரவி, கார்த்திக் ஆகிய 5 பேரையும் கையும், களவுமாக பிடித்து தேனிக்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரனையின்போது இந்த மோசடி கும்பல் கடந்த 10 ஆண்டுகளாக பலரிடம் இது போல வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு பலகோடி ரூபாய் வசூலித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 10 செல்போன்கள் மற்றும் 1 ஏடிஎம் கார்டு ஆகியவவை பறிமுதல் செய்யபட்டன. மேலும், இந்த கும்பலின் முக்கிய தலைவனான மாதேஷ் என்பவன் தலைமறைவான நிலையில் அவனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:காதலித்து ஏமாற்றியதாக வேலூர் இளைஞர் மீது கோவா இளம்பெண் புகார்

ABOUT THE AUTHOR

...view details