தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன், ஒரு லட்சம் திருட்டு - தேனியில் பரபரப்பு - பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திருட்டு

தேனி: பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் ஊஞ்சாம்பட்டி பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

theft

By

Published : Jun 5, 2019, 3:03 PM IST

தேனி ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள கிருஷ்ணா நகரில் விமல்குமார் (33) என்பவர் தனது மனைவி இலக்கியா (30), மகள் ராகமித்ரா ஆகியோருடன் வசித்துவருகிறார். இவர் ஜூன் 1ஆம் தேதி கம்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று விமல்குமார் வீடு இன்று திரும்பியபோது, வீட்டின் கிரில் கேட், கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 40 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் ரொக்கம், வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருட்டுச் சம்பவம் நடைபெற்ற வீடு

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் தெய்வம், காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான காவல் துறையினர், தடயவியல் நிபுணர்களுடன் வந்து ஆய்வு செய்து, தடய ஆவணங்களை சேகரித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த அல்லிநகரம் காவல் துறையினர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details