தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிக்டாக்கில் கள்ளச்சாராயம் காய்ச்சும் காணொலி: தேனி அருகே 4 பேர் கைது

தேனி: போடியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை டிக்டாக் வலைதளத்தில் பதிவுசெய்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

ே்
ே்

By

Published : Apr 17, 2020, 10:21 AM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இச்சமயத்தில் குடிமகன்களின் தேவைகளை அறிந்து தங்களுக்கு வியாபாரம் செழிக்க ஆங்காங்கே பலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்துவருகின்றன.

டிக்டாக்கில் கள்ளச்சாராயம்

அந்தவகையில், தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த பிரதீப் (26), விவேக் (25), பிரபாகரன் (28), சரவணன் (32) ஆகிய நான்கு பேர் புதுக்காலனி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியுள்ளனர். இதுமட்டுமின்றி அதைப் படம்பிடித்து டிக்டாக் செயலியில் பதிவேற்றமும் செய்துள்ளனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது

இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியதையடுத்து, காவல் துறையினர் கண்களிலும் சிக்கியது. இதையடுத்து, அவர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த காவல் துறையினர், நால்வரையும் கைதுசெய்தனர்.

மேலும், அவர்களிமிருந்த 2 லிட்டர் சாராயத்தையும் கீழே ஊற்றி அழித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்ற பெண் கைது!

ABOUT THE AUTHOR

...view details