தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் 32 பேருக்கு கரோனா! - தேனி அரசு மருத்துவமனை

தேனி: ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் 32 பேர் உள்பட 297 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இன்று (ஆகஸ்ட் 6) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Theni medical college
தேனி அரசு மருத்துவமனை

By

Published : Aug 7, 2020, 3:41 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வந்த 47 வயது பெண், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 135 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து அலுவலகப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், குடிநீர் விநியோகிப்பாளர்கள், தற்காலிக பணியாளர்கள் என 32 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் 297 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 836ஆக உயர்ந்துள்ளது.

பெரியகுளத்தை சேர்ந்த 65 வயது முதியவர், 56 வயது நபர் மற்றும் தேனியைச் சேர்ந்த 57 வயது நபர் என 3பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நாளில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் போடியில் - 80, ஆண்டிபட்டியில் - 66, தேனியில் -43, கம்பத்தில் -39 மற்றும் சின்னமனூரில் 34 நபர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது வரை 4 ஆயிரத்து 68 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 686 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையும் படிங்க: தேனியில் சூறைக்காற்றால் 50 ஆயிரம் வாழை மரங்கள் நாசம்!

ABOUT THE AUTHOR

...view details