தேனி மாவட்டம் போடி - தேவாரம் சாலையில் காவல்துறையினர் நேற்று (அக்.11) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கினங்க வந்துகொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் ஆட்டோவில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் வந்த சங்கராபுரம் விக்னேஷ், தேவாரம் இளையராஜா ஆகியோரை கைது செய்தனர்.