தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மலைப்பகுதியில் ஊத்தம்பாறை ஆறு அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு இளைஞர்கள் அதிக அளவில் வந்து குளித்துச் செல்கின்றனர். இந்நிலையில் போடியில் மின்சாரத் துறையில் பணிபுரியும் 4 பேர் உத்தம்பாறை ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது ஆற்றின் நீரோட்டம் அதிகமானதால் நீந்த முடியாமல் ஆற்றின் வெள்ளத்தில் தத்தளித்தனர். பின்னர் பாண்டியராஜன் (26), குமரேசன் (32), சுரேஷ் (22) ஆகிய மூன்று பேர் ஆற்றின் மறுபக்கம் உள்ள கரைக்கு சென்றனர். ஆற்றின் வெள்ளத்தை நீந்த முடியாமல் கோகுல் (22) அடித்துச் செல்லப்பட்டார்.