தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை; ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது! - rape case

தேனி: பள்ளி மாணவிக்கு பிரியாணியில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் மற்றும் அவரது பெற்றோரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

cumbum pocso arrest

By

Published : Jul 25, 2019, 5:52 PM IST

தேனி மாவட்டம், கம்பம் மாலையம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி நாகராஜ்(23). ஓட்டுநரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு மூன்று மாதமாக தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்தால், மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இன்டர்நெட்டில் பதிவேற்றி விடுவதாக மிரட்டியும் வந்துள்ளார்.

மேலும், தனது தந்தை ஏசு என்ற குமார்(48), தாயார் செல்வி(40) ஆகியோரையும் அழைத்து வந்து மாணவியை காதலிக்குமாறும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சக்தி நாகராஜ், மாணவியை மிரட்டி, வீட்டிற்கு வரவழைத்துள்ளார். மாணவியை கட்டாயப்படுத்தி பிரியாணியை சாப்பிட வைத்துள்ளார். சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கிய மாணவியை, பாலியல் வன்கொடுமை செய்து அதனை போட்டோ, வீடியோ எடுத்துள்ளார்.

மயக்கம் தெளிந்த மாணவியிடம், இது குறித்து வெளியே கூறினால் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். வீட்டுக்கு திரும்பிய மாணவி, தனது பெற்றோரிடம் நடந்ததை அழுதப்படியே கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் கம்பம் வடக்கு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சக்தி நாகராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தந்தை ஏசு என்ற குமார், தாய் செல்வி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை

ABOUT THE AUTHOR

...view details