தமிழ்நாடு- கேரள எல்லையில் உள்ள பெரியாறு புலிகள் காப்பக வன சரணாலயப் பகுதியில் சிறுத்தைப்புலிகள் வேட்டையாடப்படுவதாக கிடைத்த தகவலின் படி தேக்கடி வனத்துறையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் தேக்கடியில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்ததையடுத்து அவர்களை காவல் துறையினர் பின் தொடர்ந்துள்ளனர்.
சிறுத்தைபுலி தோலை விற்க முயன்ற 3 பேர் கைது - தேக்கடி
தேனி: தேக்கடியில் சிறுத்தைப்புலியை வேட்டையாடி அதன் தோலை விற்க முயன்ற மூன்று நபர்களை ஆண்டிபட்டியில் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சிறுத்தைப்புலியின் தோலைப் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.போத்தம்பட்டியைச் சேர்ந்த ராஜா(37), மானூத்து செல்லப்பாண்டி (49), தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள நந்தனார்புரத்தைச் சேர்ந்த பாண்டி (35) ஆகியோர் எனத் தெரியவந்தது.
பின்னர், கைதுசெய்யப்பட்ட மூவரும் தமிழ்நாடு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஆண்டிபட்டி வனத்துறையினர் குற்றவாளிகள் மூன்று பேரையும் ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தைத் தோலின் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் வரை இருக்கலாம் என்று தெரிவித்தனர்.