கடந்த சில நாள்களாகவே தேனி மாவட்டத்தில் கரோனாவின் பாதிப்பு கணிசமாக அதிகரித்துவருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில், புதிய உச்சமாக இன்று (ஜூலை 27) ஒரே நாளில் 280 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தேனியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 280 நபர்களுக்கு கரோனா! - தேனியில் மேலும் 280 பேருக்கு கரோனா
தேனி: மாவட்டத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 280 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்தது.
போடி அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்கள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 2 பயிற்சி மருத்துவர்கள், திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர், பெரியகுளம் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகப் பணியாளர், கம்பம் காமையகவுண்டன்பட்டி ஆரம்பச் சுகாதார நிலையச் செவிலி, தேனி தீயணைப்பு நிலையப் பணியாளர், கம்பம் மின்வாரியச் செயற்பொறியாளர், தேனி போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர், கூடலூரைச் சேர்ந்த 2 தனியார் பள்ளி ஆசிரியர்கள், தேவாரத்தைச் சேர்ந்த தனியார்பள்ளி ஆசிரியை உள்ளிட்ட 280 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,053ஆக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெரியகுளத்தைச் சேர்ந்த 58 வயது நபர் உயிரிழந்தார். இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 51ஆக அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் தற்போது வரை 2,042 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,962 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படிங்க:நெல்லையில் 4 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!