தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் தொழிலதிபர் வீட்டில் 25 சவரன் நகைகள் திருட்டு

தேனி: என்ஆர்டி நகர் பகுதியிலுள்ள தொழிலதிபர் வீட்டில் 25 சவரன் தங்க நகைகள், 45 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடிச்சென்ற நபர்களை காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

25 shaving jewelery stolen from businessman's house: Police investigation!
நகைகள் திருட்டு

By

Published : Oct 30, 2020, 5:02 PM IST

Updated : Oct 30, 2020, 5:15 PM IST

தேனி என்ஆர்டி நகர் பகுதியில் வசித்துவருபவர் தொழிலதிபர் சீனிவாச ராகவன். இவர், சின்னமனூர் அருகேவுள்ள புலிக்குத்தி கிராமத்தில் கற்றாழை சாறு ஏற்றுமதி தொழில் செய்துவருகிறார். இவர், குடும்பத்தினருடன் கோயமுத்தூரிலுள்ள தனது சகோதரர் வீட்டிற்கு நேற்று (அக். 29) மாலை சென்றுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாததையறிந்த கொள்ளையர்கள் நேற்றிரவு முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பூஜை அறையில் இருந்த மர லாக்கர் பீரோவை உடைத்து அதிலிருந்து 25 சவரன் தங்க நகைகள், 45 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பின்னர், இன்று (அக்.30) காலை கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறை, வீட்டின் உரிமையாளர் சீனிவாச ராகவனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், திருட்டுச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Last Updated : Oct 30, 2020, 5:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details