தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பச்சிளம் குழந்தையை காப்பாற்ற இரண்டரை மணி நேரத்தில் 240 கி.மீ பயணம் - kovai

தேனி: உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு மாத குழந்தையை காப்பாற்ற தேனியில் இருந்து கோவைக்கு இரண்டரை மணிநேரத்தில் வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் கூட்டு முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறது.

240 கிலோமீட்டர் இரண்டரை மணி நேரம்!

By

Published : Aug 4, 2019, 6:25 AM IST

கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தசாமிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இரண்டு மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆர்த்தி தேனியில் உள்ள தனது தயார் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இதனையடுத்து திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தேனி அரசு மருத்துவமனையில் சிகிக்சைகாக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தைக்கு மூச்சுக்குழலில் அடைப்பு ஏற்பட்டதாகவும் தொடர்ந்து சிகிக்சை அளித்தாலும் அதற்கு போதுமான மருத்துவ வசதி இங்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.

உடனே விசாரித்த குழந்தையின் பெற்றோர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இதற்கு சிகிச்சை அளிக்கும் வசதியுள்ளதை அறிந்து அங்கு குழந்தையை கொண்டு செல்ல முடிவு எடுத்தனர்.

உடனே ஆம்புலன்ஸ் உரிமையாளர் சதீ‌‌ஷ்குமார் என்பவரை தொடர்பு கொண்டு, இன்குபேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு சதீஸ்குமார் கேரள மாநிலம் திரிச்சூரில் இருந்து இன்குபேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கடந்த 31ஆம் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தடைந்தார்.

பின்பு அங்கிருந்து விரைவாக செல்லு மாறும் எப்போது வேண்டுமானலும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம் என கூறிய பின்பு, ஓட்டுநர் சதீஸ்குமார், விரைவாக செல்ல வேண்டியதற்காக அவர் செல்லும் வழியில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, முன்கூட்டியே திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்ட ஆம்புலன்ஸ் உரிமையாளர்களும்கும் ஓட்டுனர்களுக்கு தகவல் தெரிவித்து. வாகன நெரிசலை தவிர்க்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டது, மாலை 6.10 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிக்சை அளித்தனர். சுமார் 210 கிலோமீட்டர் தூரத்தை 2 மணி 55 நிமிடத்தில் கடந்துள்ளனர்.

240 கிலோமீட்டர் இரண்டரை மணி நேரம்!

பின்பு அக்குழந்தைக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமாக உள்ளது. குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details