தேனி: பூதிப்புரம் கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் சாகுபடி செய்து தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் பல வருடங்களாக சுமார் 2000-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வளர்த்து, ஏராளமான விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஏப்.22-ஆம் தேதி திடீரென மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. சூறாவளி காற்றுடன் பெய்த இந்த மழையின் தாக்கத்தால், பூதிப்புரம் கிராமத்தில் வளர்க்கப்பட்ட அனைத்து தென்னை மரங்களும் சரிந்து விழுந்ததால், விவசாயிகளுக்கு அதிகளவு நட்டமும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பல வருடங்களாக தென்னை மரங்களைப் பராமரித்து வளர்த்து வந்த விவசாயிகளுக்கு, பல லட்சம் மதிப்பிலான தென்னை மரங்கள் வேரோடு சரிந்தது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.