தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட எம் சாண்ட் மணல் லாரிகளில் கடத்தப்படுவதாக தேனி மாவட்ட உத்தமபாளைய வருவாய்த்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி தலைமையில் குமுளி மாலைச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை சோதனையிட்ட போது, அதில் அனுமதி மறுக்கப்பட் எம் சாண்ட் மணலையும் ஜல்லியையும் ஏற்றி கடத்திச் செல்லவிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இரு லாரிகளையும் பறிமுதல் செய்த வருவாய்த்துறை அலுவலர்கள், பாதுகாப்பு கருதி லாரிகளை லோயர்கேம்ப் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதுகுறித்து லோயர் கேம்ப் காவலர்கள் தெரிவிக்கையில், "லாரிகளை கனிமவளத்துறையினர் பிடித்துக் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மற்றபடி எந்த விவரமும் தெரியாது" என்றனர்.