தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவு வாங்கிய கணவாய்... தேனி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஓட்டுநர் உயிரிழப்பு! - தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தேனி அருகே ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் இரு அரசுப்பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தநிலையில், அரசுப்பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஓட்டுநர் உயிரிழப்பு
ஓட்டுநர் உயிரிழப்பு

By

Published : Jun 19, 2022, 12:10 PM IST

தேனி:குமுளியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசுப்பேருந்தும், திருச்செந்தூரில் இருந்து குமுளி வந்த அரசுப்பேருந்தும் ஆண்டிபட்டி-உசிலம்பட்டி இடையேயான கணவாய் பகுதியில் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நாகர்கோவில் அரசுப்பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமுளியில் இருந்து நாகர்கோவிலுக்கு ஓட்டுநர் ரத்தினசாமி என்பவர் ஒரு அரசுப்பேருந்தை இயக்கிச்சென்றுள்ளார்.

இப்பேருந்து ஆண்டிபட்டிக்கும் உசிலம்பட்டிக்கும் இடையேயான கணவாய் மலைப்பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, எதிரே திருச்செந்தூரில் இருந்து குமுளி நோக்கி வந்துகொண்டிருந்த மற்றொரு அரசுப்பேருந்து மீது மோதி பயங்கரமாக விபத்துக்குள்ளானது. வேகமாக வந்த இந்த 2 அரசுப்பேருந்துகளும் கணவாயை அடுத்த வளைவுப்பகுதியில் திரும்பும்போது, ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டன.

இதில் இடிபாடுகளில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் மற்றொரு அரசுப்பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கணவாயில் நடந்தது என்ன? இந்த கோரவிபத்து நடந்த இடத்திலிருந்து மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே நாகர்கோவில் அரசுப்பேருந்தை இயக்கிய கன்னியாகுமரி மாவட்டம், குருந்தங்கோடு கிராமத்தைச் சேர்ந்த 54 வயதான ரத்தினசாமி என்பவர் உயிரிழந்தார். மேலும் எதிரே வந்த மற்றொரு அரசுப் பேருந்து ஓட்டுநர் சேரன்மாதையன் படுகாயமடைந்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். தவிர 2 அரசுப்பேருந்துகளில் வந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

அதிவேகமாக கணவாய் மலைப்பகுதியிலிருந்து வளைவுப்பகுதியில் 2 அரசுப்பேருந்துகளும் திரும்பியதால் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . விபத்தில் காயமடைந்தவர்களை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

2 அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக் கொண்டு விபத்து

இதையும் படிங்க: அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பணத்தில் பங்கு தருவதாகக் கூறி ரூ.36 லட்சம் மோசடி

ABOUT THE AUTHOR

...view details