தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாளுக்கு நாள் நூறுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் வைரஸ் பரவலைக் குறைக்க முடியவில்லை.
இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று மருத்துவர்கள், ஒரு பயிற்சி மருத்துவர் என நான்கு மருத்துவர்கள், ஓடைப்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர், மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற செயலர், வைகை அணை பொதுப்பணித்துறை குடியிருப்பு, பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 18 குழந்தைகள் என மொத்தம் 165 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.