தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் டன் கணக்கில் புகையிலை, போதைப் பாக்குகள் பறிமுதல் - theni district news

தேனி : அல்லிநகரம் அருகே 1,500 கிலோ எடையுள்ள புகையிலை, போதைப் பாக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், மூன்று பேரைக் கைது செய்தனர்.

1,500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
1,500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

By

Published : Aug 31, 2020, 7:27 PM IST

தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அல்லிநகரம் வெங்கலா கோயில் தெருவில் ரோந்துப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த ஒரு வீட்டில் புகையிலை, போதைப் பொருள்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

1,500 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

இது தொடர்பாக ராஜகுரு, கணேசன், மணிகண்டன் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்த நிலையில், 70 மூடைகளில் இருந்த 1,500 கிலோ எடையுள்ள புகையிலை, போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

இவற்றின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து அல்லிநகரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் - ஒருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details