தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

தேனி: போடியிலிருந்து கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், இதுதொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

15டன் ரேஷன் அரிசி பறிமுதல்! இருவர் கைது...
15டன் ரேஷன் அரிசி பறிமுதல்! இருவர் கைது...

By

Published : Nov 2, 2020, 4:59 PM IST

தேனி மாவட்டம் போடியிலிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் போடி பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போடி புதூர் பகுதியில் செயல்பட்டுவரும் பீர் ஒலி என்பவருக்குச் சொந்தமான அரிசி ஆலையில் ரேசன் அரிசியை மாவாக அரைத்து, அதனை கேரளாவிற்கு விற்பனைக்காக கொண்டுசெல்வதற்குத் தயார் செய்துவந்தது கண்டறியப்பட்டது.

இதில் கேரளாவிற்கு கடத்துவதற்காக வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த ஐந்து டன் அரிசியும், ஆலையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 10 டன் அரிசியும் என மொத்தம் 15 டன் அரிசியை காவல் துறையினர் கைப்பற்றினர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசி உத்தமபாளையம் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போடி காவல் துறையினர் அரிசி ஆலை உரிமையாளர் பீர்ஒலி, வாகன ஓட்டுநர் ஐயப்பன் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details