தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராம அரசு சுகாதார ஆய்வாளர், தனியார் கண் மருத்துவமனை பணியாளர்கள் 4 பேர், உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 5 பேர், ஆயுதப்படை காவலர் உள்ளிட்ட 144 பேருக்கு நேற்று (ஆகஸ்ட் 22) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு: தேனியில் ஒரே நாளில் 144 பேருக்கு தொற்று! - கரோனா எண்ணிக்கை
தேனி: பேரூராட்சி பணியாளர்கள், தனியார் கண் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Theni district corona details
இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 275ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொற்று கண்டறியப்பட்டவர்கள் பணிபுரிந்த அலுவலகங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.
கரோனாவால் சிகிச்சைப் பெற்றுவந்த மூன்று பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளது. மேலும், சிகிச்சை பெற்றுவந்த 8ஆயிரத்து 970 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.