தேனி மாவட்டம் போடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போடி துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் தேரடி வீதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த 55 வயது மதிக்கதக்க பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.