கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதைத் தவிர மற்ற காரணங்களுக்காக மக்கள் வீட்டைவிட்டு வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகள் தொகுப்பு அடங்கிய பைகள் விற்பனை செய்யப்பட்டும், வாகனங்களில் நேரடியாக வீடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சொமேட்டா நிறுவனம் தோட்டக்கலைத் துறையினருடன் இணைந்து மக்கள் தங்களது மொபைல் போன்களில் காய்கறிகளை ஆர்டர் செய்தால் நேரடியாக வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்பட்ட காய்கறிகள் உடனடியாக மக்களை சென்றடையும் எனவும் தெரிவித்துள்ளனர் விவசாயிகள்.
காய்கறி டெலிவரி செய்யும் சொமேட்டோ மேலும், நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு காலங்களில் அறுவடை செய்யப்படும் காய்கறிகளை பதனிடுவதற்காக ஐந்நூறு மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர் சாதன சேமிப்பு கிடங்கும் திறக்கபட்டுள்ளது விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மணக்க மணக்க வீட்டு சாப்பாட்டையும் டெலிவரி செய்யும் சொமாட்டோ?