நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நெடுகல்கம்பை கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடையே அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக மாவோயிஸ்ட் குழுவைச் சேர்ந்த இளைஞர் டேனிஷ்(எ)கிருஷ்ணா மூளைசலவை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவர் கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று இவர் நீலகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், விசாரணையை அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் கைது செய்யப்பட்ட டேனிஷ், நீதிமன்ற வளாகத்தில் அரசுக்கு எதிராகவும், மோடி, அமித்ஷா, அம்பானி, அதானி, காவி பயங்கரவாதத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.