தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டின் ஒற்றுமைக்காக நடைபயணம்; இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்! - Coonoor walking in Over Tamil Nadu emphasizing

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களுக்கும் நடைபயணம் மேற்கொண்டு வரும் இளைஞர் இன்று (ஜன.08) குன்னூர் வந்தடைந்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 8, 2023, 10:26 PM IST

நாட்டின் ஒற்றுமைக்காக நடைபயணம்; இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு வருகை தந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் மீனவ குடும்பத்தைச் சார்ந்த வாலிபர் பினோரியோ. இவர் இந்தியாவின் ஒற்றுமைக்காக விழிப்புணர்வு (Awareness for unity of India) ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கு நடைபயணமாக சென்று வருகிறார்.

இதுவரை 14 மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவர் குன்னூருக்கு இன்று (ஜன.8) வந்தடைந்தார். இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தான் இந்த நடை பயணத்தை மேற்கொள்வதாக சாதனையாளரான அந்த இளைஞர் தெரிவித்தார். மேலும், நாள் ஒன்றுக்கு 50 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்வதாகவும் மீதமுள்ள 24 மாவட்டங்களையும் நடந்து சென்று 2,200 கிலோ மீட்டர் தூரத்தை நிறைவு செய்வதாக கூறினார்.

மேலும், இவருக்கு குன்னூர் பகுதியில் உள்ள இளைஞர்கள் சிறப்பான வரவேற்பு அளித்ததுடன் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: 'மண் பானை செய்யும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்' - தொழிலாளர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details