நீலகிரி:உதகை அடுத்துள்ளஉள்ள முள்ளிக்கூர் பகுதியில் இயந்திரம் மூலம் கேரட் சுத்தம் செய்யப்பட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இங்கு தம்பா என்ற இளைஞர் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று(டிச.10)வழக்கம் போல் தம்பா உள்ளிட்ட ஊழியர்கள் கேரட் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கேரட் கழுவும் இயந்திரத்தில் தம்பா சிக்கிக்கொண்டார். இதைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் சத்தம் போடவே உடனடியாக இயந்திரம் நிறுத்தப்பட்டது.
பின்னர் இயந்திரத்தில் சிக்கிய தம்பாவை மீட்டு ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் அங்கிருந்த ஊழியர்கள் கார் மூலம் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தம்பா உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அறிந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற உதகை போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:வெள்ளப் பாதிப்பால் சேதமடைந்த அரசு ஆவணங்கள், பள்ளி சான்றிதழ்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் ஏற்பாடு.. எந்தெந்த பகுதிகள்?