தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருந்த இடத்திலிருந்தே புகார் அளிக்கலாம்..புதிய மொபைல் செயலி அறிமுகம்! - Nilgiris District News

நீலகிரியில் உள்ள மலைக்கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இருந்த இடத்திலிருந்தே காவல் துறையிடம் புகார் அளிக்கும் விதமாக புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யபட்டது.

நீலகிரி மாவட்ட காவல் துறை
நீலகிரி மாவட்ட காவல் துறை

By

Published : Aug 25, 2020, 6:44 PM IST

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், தேவாலா, பந்தலூர், கீழ்கோத்தகிரி, குந்தா போன்ற பகுதிகளில் ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளன.

இப்பகுதிகளில் இரண்டு லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்க சுமார் 100-கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய வேண்டி உள்ளது. இந்த பயணத்தினால் மலை பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புகார் அளிக்க காவல் நிலையங்கள் எங்கு உள்ளது என்பது தெரியாத நிலையும் இருந்தது.

இந்நிலையில் மலைக் கிராம மக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே புகார் அளிக்கும் விதமாகவும், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய மொபைல் எண்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல் அடங்கிய புதிய மொபைல் செயலியை நீலகிரி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்தது.

சசிமோகன் - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

இந்தச் செயலியை நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சசிமோகன் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்தச் செயலி வரும் பெறப்படும் புகார்களுக்கு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த பிரபலங்களை கைது செய்யக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details