மாமல்லபுரத்தில் 11, 12 ஆகிய தினங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக அவர்களை வரவேற்கும்விதமாக மத்தியமுன்னாள்அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபரின் படங்கள் பதித்த பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள நீண்ட நெடுங்கால நட்பை வலுப்படுத்தக்கூடிய வகையில் பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம் செய்திருந்தார். தற்போது சீன அதிபரின் வருகை தமிழ்நாட்டிற்கும் சீனாவுக்குமிருந்த பழைய நட்பை மேம்படுத்தும்" எனத் தெரிவித்தார்.