நீலகிரி மலை ரயில் நுாற்றாண்டு காலம் பழமை வாய்ந்தது. பாரம்பரியம் மாறாமல் இருக்கும் இந்த மலை ரயிலில், உலகளவில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த மலை ரயிலுக்கு கடந்த 2005 ஜூலை 15இல், யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது. கடந்த 1914இல் சுவிட்சர்லாந்தில் எக்ஸ் கிளாஸ் நிலக்கரி இன்ஜின் வடிவமைக்கப்பட்டு 1918இல் இங்கு கொண்டுவரப்பட்டது. நூற்றாண்டு காலம் ஓடிய இந்த இன்ஜினை பராமரிப்பதற்காக குன்னூர் பணிமனையில் இருந்து திருச்சி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.