ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25ஆம் தேதி மருந்தாளுநர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. மருத்துவத் துறையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் மருந்தாளுநர்களின் அறிவுரையின்படிதான் நோயாளிகள் மருந்து உட்கொள்ள வேண்டும். இந்த ஆண்டுக்கான மருந்தாளுநர் தினமானது உதகையில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியின் சார்பாக கொண்டாடப்பட்டது.
கொண்டாட்டத்தில் உதகையின் முக்கிய வீதியான கமர்சியல் சாலையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் மருத்துவர் ஆலோசனைபடி மருந்து உட்கொள்ளுதல், மருந்து சீட்டு வைத்தே மருந்துகள் வாங்குதல் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணியில் ஈடுப்பட்டனர்.