குன்னூர், கோத்தகிரி, பந்தலூர், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் டான்டீ தோட்டங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
போனஸ் வழங்காததை கண்டித்து டான்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை - டான்டீ அலுவலகத்தை முற்றுக்கையிட்ட தொழிலாளர்கள்
நீலகிரி: 20 சதவீத போனஸ் வழங்காததைக் கண்டித்து குன்னூரில் உள்ள டான்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுக்கையிட்டனர்.
இந்தத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் 20 சதவீத போனஸ் வழங்காததால் இன்று 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குன்னூர் டான்டீ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அனைத்து தொழிலாளர்களும் மனு அளிக்க அலுவலகத்திற்குள் செல்ல முயன்றதால் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் நான்கு பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு அலுவலர்களிடம் மனு அளித்தனர்.