நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் துணிப்பைகள், மூங்கிலால் ஆன கூடைகளை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கூடை பின்னும் தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் ஓரளவு மேம்பாடு அடைந்து வந்தது.
இந்நிலையில், கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 160 நாட்களுக்கும் மேலாக இந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்களுக்கு வீடுகள் இல்லாத நிலையில், சாலையோரங்களில் தங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். எனினும் இவர்கள் தயாரிக்கும் கூடைகளில் ஒன்று இரண்டு மட்டுமே விற்பனை ஆவதால் போதிய வருமானமும் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.