தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் புலி தாக்கி பெண் பலி; பொதுமக்கள் அச்சம்!

முதுமலை புலிகள் காப்பக யானைகள் வளர்ப்பு முகாமிற்கு பின்புறம் உள்ள வனப்பகுதில் புலி தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் புலி தாக்கி பெண் பலி; பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டத்தில் புலி தாக்கி பெண் பலி; பொதுமக்கள் அச்சம்

By

Published : Feb 1, 2023, 11:02 AM IST

நீலகிரி மாவட்டத்தில் புலி தாக்கி பெண் பலி; பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக யானைகள் வளர்ப்பு முகாம் பின்பகுதியில் மாரி(50) என்ற பழங்குடியின பெண் புலி தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை முதல் மாரி (50) என்ற பெண் காணாமல் போன நிலையில் இன்று வனப்பகுதியில் இறந்த நிலையில் இருந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்றுள்ள வனத்துறையினர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வனத்துறையினர் புலியின் கால்தடங்களை வைத்து ஆய்வு நடத்தி, வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் வேட்டை தடுப்பு காவலரை புலி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக முதுமலை தெப்பக்காடு வன எல்லைக்குட்பட்ட தேவர் சோலை, நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மர்மமான முறையில் 4 மேற்பட்ட பசு மாடுகள் மாமிச உண்ணி தாக்கி இறந்துள்ளது. புலி தாக்கி பெண் இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நீலகிரியில் யானை தாக்கி எஸ்டேட் காவலர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details