நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியானது உள்மண்டலம், வெளிமண்டலம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்னும், பின்னும் வனஉயிரின கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் வெளிமண்டல வனப்பகுதியில் இன்று காலை முதல் வனஉயிரின கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. சுமார் 367 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வெளிமண்டல வனப்பகுதியானது மொத்தம் 35 நேர்கோடுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு நேர்கோட்டிற்கு நான்கு பேர் வீதம் சுமார் 150 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.