தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில்  வாய் கிழிந்த காட்டெருமை உயிரிழப்பு!

நீலகிரி: வெலிங்டன் ராணுவப் பகுதியில் பன்றிக்கு வைத்த வெடிகாயை கடித்து வாய் கிழிந்த நிலையில் 6 நாள்களாகச் சுற்றி வந்த காட்டெருமை உயிரிழந்தது.

குன்னூரில் வாய் கிழிந்த வாய் கிழிந்த காட்டெருமை உயிரிழப்பு  Wild water buffalo  Wild water buffalo Dead In Coonoor  Wild water buffalo Dead In The Nilgiris  காட்டெருமை உயிரிழப்பு  நீலகிரியில் காட்டெருமை உயிரிழப்பு
Wild water buffalo Dead In Coonoor

By

Published : Jan 30, 2021, 9:46 AM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகள் அதிகளவில் உள்ளன. இவை தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிக்களிலும், தேயிலை எஸ்டேட்களிலும் உலா வருகிறது. இந்நிலையில், வெலிங்டன் ராணுவப் பகுதியில் கடந்த 6 நாள்களாக காட்டெருமை ஒன்று வாய்கிழிந்த நிலையில் சுற்றி வந்தது.

உணவு உண்ண முடியாமலும் தண்ணீர் குடிக்க முடியாமலும் தவித்து வந்த இதனை வனத்துறையினர் 3 குழுக்களாகப் பிரிந்து வெலிங்டன் பகுதிகளில் தேடி வந்தனர். இந்நிலையில், காட்டெருமை கீழ் கரோலினா என்ற பகுதியில் ஓடையில் உயிரிழந்து கிடப்பதாகப் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டு அதே இடத்தில் காட்டெருமை புதைக்கப்பட்டது. பன்றிக்கு வைக்கும் வெடிகளில் காட்டெருமைகள் சிக்குவதால் வெடி வைக்கும் சமூக விரோதிகளை கண்டறிய 10 இடங்களில் கண்காணிப்பு கேமிரா வைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

உயிரிழந்து கிடக்கும் காட்டெருமை

இதையும் படிங்க:ஊட்டி ரயில் பாதையில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details