நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அட்டடி பகுதியில் காட்டெருமை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இன்று (அக்.26) அதிகாலை அப்பகுதி வழியாக நடந்து வந்த ரஞ்சித் குமார் என்பவரை காட்டெருமை தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் டிஎஸ்பி சுரேஷ், வனத்துறையினர் ஆகியோர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.