நீலகிாி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பலாப்பழம் சீசன் தொடங்கியதால், காட்டு யானைகள் அங்கு கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளது. மேலும் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக காட்டு யானைகள் சாலைகளுக்கு வருகிறது.
இந்நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், இச்சி மரம் அருகே சாலையைக் கடப்பதற்காக குட்டியுடன் காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வனத்துறையினா் விரைந்து வந்து, சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினர். பின் காட்டு யானைகள் சாலையைக் கடந்த பிறகே, வாகனங்களை செல்ல அனுமதித்தனா்.