நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் படையெடுத்து வந்துள்ளன. இவை, மலை ரயில் பாதை, பழங்குடியினர் வசிக்கும் கிராமம், சாலையோரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குரும்பாடி அருகே குட்டியுடன் காட்டு யானைகள் உணவுக்காக சாலையை கடந்தன. அப்போது, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி காட்டு யானைகள் செல்ல வழிவகை ஏற்படுத்தினர்.