நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் பர்லியார் பகுதியில் அதிக அளவில் பலா மரங்கள் உள்ளதால் பலா பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளி பகுதியில் இருந்து அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கமாகும். மேலும் அங்குள்ள தேயிலைத் தோட்டங்களிலும் உலவும்.
பலாப்பழங்களை குறிவைத்து குன்னூரில் உலா வரும் காட்டு யானைகள்! - நீலகிரி வனத்துறையிடம் மக்கள் கோரிக்கை
குன்னூர் அருகே உள்ள பகுதிகளில் தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
Etv Bharatகுன்னூர் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மரப்பாலம் ரன்னிமேடு காட்டேரி பகுதி வழியாக சோல்டுராக் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.இதனால் அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் தேயிலைத் தோட்டத்தில் தற்போது பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.