நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் உள்ள சேரம்பாடி குழில்வயல் இருளர் பழங்குடி கிராமம் உள்ளது. இந்த குக்கிராமத்தில் சுமார் 30 வீடுகள் உள்ள நிலையில் இன்று(அக்.29) அதிகாலை பழங்குடியினர் கிருஷ்ணன் என்பவர் வீட்டில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தபோது குட்டியுடன் புகுந்த காட்டு யானை கிருஷ்ணன் வீட்டை உடைத்து சமையலறையை நாசம் செய்தது.
வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்! - பழங்குடியினர் போராட்டம்
நீலகிரி: பந்தலூர் அருகே சேரம்படி குழில்வயல் பழங்குடியினர் கிராமத்தில் நள்ளிரவு ஒருவரது உடைத்து காட்டு யானை கூட்டம் சூறையாடியது.
சூறையாடிய காட்டுயானைகள்
இதனால் பயந்து போன கிருஷ்ணன், அவரது குடும்பத்தினர் வீட்டின் மறு புறவாசல் வழியாக தேயிலை தோட்டத்தில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. யானையை விரட்ட தவறிய வனத்துறையினரைக் கண்டித்து பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.