முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொக்காபுரம் வன பகுதியில் கடந்த சில தினங்களாக 40 வயது மதிக்கதக்க ஒற்றை ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றி வருகிறது. இந்த யானை கடந்த 2 நாட்களாக பொக்காபுரம் கிராமத்திற்குள் புகுந்து பொதுமக்களின் வீட்டு வாசல்களில் இருந்த மரங்களை சாப்பிட்டு நாசம் செய்தது. பகல் நேரங்களிலேயே குடியிருப்பு பகுதிக்குள் வரும் இந்த யானை, பொதுமக்கள் விரட்டினாலும் வன பகுதிக்குள் செல்வதில்லை. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்த நிலையில், இன்று (டிசம்பர் 18) மசினகுடி ஊருக்குள் புகுந்தது.
முதுகில் பலத்த காயத்துடன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை! - காட்டு யானையின் முதுகில் காயம்
நீலகிரி: பொக்காபுரம் வன பகுதியில் முதுகில் பலத்த காயத்துடன் சுற்றித் திரியும் ஒற்றை ஆண் காட்டு யானை, மசினகுடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் குடியிருப்புகளில் இருந்த வாழை, தென்னை மரங்களை சாப்பிட தொடங்கியது. தகவல் அறிந்து அங்கு வந்த சிங்காரா வனத்துறையினர் அந்த யானையை ஜீப்பை பயன்படுத்தி அருகில் உள்ள வன பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே அந்த யானைக்கு முதுகில் காயம் ஏற்பட்டு பல நாட்கள் ஆவதாகவும் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் காயத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.