நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில், தற்போது மூன்று காட்டுயானைகள் சாலையில் உலா வருகின்றன. இதில் ஒரு ஆண் காட்டு யானை தனியாகப் பிரிந்து சாலையோரப் பகுதிகளில் உணவு , தண்ணீருக்காக உலாவுகிறது.
இதற்கிடையே, காட்டேரி தோட்டக்கலைப் பண்ணையில் வேலியை உடைத்து யானை உள்ளே புகுந்தது. இதனால் தோட்டக்கலைப் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொடர்ந்து, வனச்சரகர் சசிகுமார் உத்தரவின் பேரில், வனக்காப்பாளர் மகேஷ், வனக்காவலர் ராம்குமார், வேட்டைத் தடுப்புக் காவலர் லோகேஸ்வரன் ஆகியோர் அப்பகுதியில் யானையை விரட்டி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.