நீலகிரி:பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதர்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டுயானை சுற்றி திரிந்து வந்தது. சுமார் 6 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் காட்டு யானை நேற்று இரவு அங்குள்ள எஸ்டேட்டிற்குள் வந்து பாக்கு மரத்தை இழுத்து சாய்த்துள்ளது. அப்போது அந்த பாக்கு மரத்தை வளைத்துள்ளது. இதனையடுத்து மின்கம்பி அறுந்து விழுந்து யானையின் உடலில் மின்சார பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக பிதர்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மின்சார இணைப்பை நிறுத்தி அங்கு வந்த வனச்சரகர் (பொறுப்பு) அய்யனார், வனவர்கள் ஜார்ஜ் பிரவீன்சன், பெலிக்ஸ், வன காப்பாளர் மில்டன்பிரபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர்.