தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காயத்துடன் சுற்றி வரும் காட்டு யானை - வனத்துறையினர் சிகிச்சை - nilgris latest news

நீலகிரி  : கூடலூர் அருகே காயத்துடன் சுற்றி வரும் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Wild elephant coming around with a wound
Wild elephant coming around with a wound

By

Published : Jun 10, 2021, 1:15 PM IST

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள சில்வர் கிளவுட் எஸ்டேட் பகுதி, மேல் கூடலூர் காலனிப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 30 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று சுற்றிவந்துள்ளது. இந்த யானைக்கு சமீப காலமாக வால் பகுதியில் காயம் ஏற்பட்டு பெரும் அவதிப்பட்டு வந்துள்ளது.

இதனைக் கண்காணித்த வனத்துறையினர் காயமடைந்த யானைக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4 நாள்களாக வனத்துறை அலுவலர்கள் காயம்பட்ட யானை நடமாடும் வழிகளில் பலாப்பழம், தர்பூசணி போன்ற பழங்களில் மாத்திரை உடன் வெல்லம் கலந்து பழங்களை இட்டு, அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விரைவில் யானையை கும்கி யானையின் உதவியோடு பிடித்து சிகிச்சையளிக்க வனத்துறை முடிவு செய்துள்ளனர்.

பழங்களில் வெல்லம், மருந்து சேர்க்கும் பணி

இதையும் படிங்க: மகரிஷி வித்யா மந்திர் நிர்வாகிகளிடம் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details