உதகமண்டலம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதுவரை கிராமபுறங்களில் மட்டும் நடமாடிய காட்டு யானை தற்போது நகரப்பகுதிகளில் வலம் வர தொடங்கியுள்ளது.
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸை விரட்டிய காட்டு யானை - போலீஸை விரட்டிய காட்டு யானை
நீலகிரி: கூடலூர் நகரப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை, பாதுகாப்பிற்காக சென்ற காவல்துறையினர் வாகனத்தை விரட்டியதால் பதற்றம் ஏற்பட்டது.
wild elephant
இதனிடையே அதிகாலையில் கூடலூர் நகர மையப்பகுதியில் காவல்துறையினர் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது திடீரென சாலையில் வந்த ஒற்றை காட்டு யானை, காவல்துறையினர் வாகனத்தை விரட்டியது. பின் சிறிது நேரம் சாலையில் நடந்து சென்ற யானை வனப்பகுதிக்குள் சென்றது. யானை சாலையில் நடந்து வந்ததை வாகனத்தில் இருந்த காவலர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினார்.
இதையும் படிங்க: குன்னூர் உபதலைப் பகுதியில் சுற்றித்திரியும் கரடி!