தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் குட்டியுடன் வலம் வரும் காட்டுயானை..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் குட்டியுடன் காட்டு யானை வலம் வருகிறது.

குன்னூர் ஷில்குரோவ் ரெயில் நிலையத்தை குட்டியுடன் முற்றுகையிட்ட காட்டுயானை..!
குன்னூர் ஷில்குரோவ் ரெயில் நிலையத்தை குட்டியுடன் முற்றுகையிட்ட காட்டுயானை..!

By

Published : Jun 9, 2022, 7:49 AM IST

Updated : Jun 9, 2022, 7:55 AM IST

நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் ஹில்குரோவ் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் நாள்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு வருகை தரும் மலைரயிலை நிறுத்தி எஞ்சினுக்கு தண்ணீர் பிடிப்பது வழக்கம்.

இந்த இடைவெளியில் ரயிலில் வந்த சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து படம் பிடித்து மகிழ்ச்சியாக மீண்டும் ரயில் மூலமாக உதகையை நோக்கி பயணித்து வந்த நிலையில் தற்போது ஒரு குட்டியுடன் காட்டு யானை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளது.

குன்னூர் ஷில்குரோவ் ரெயில் நிலையத்தை குட்டியுடன் முற்றுகையிட்ட காட்டுயானை..!

மலை ரயில் இரண்டு முறைதான் வந்து செல்கின்றது. இந்த நேரத்தில் யானை குட்டியுடன் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு சென்று விடுகிறது. மலை ரயில் அங்கிருந்து புறப்பட்டதும் மீண்டும் ரயில் நிலையத்தை முற்றுகையிடுகிறது. இந்த யானைகளை குறித்து அங்கு பணியில் இருக்கும் நிலைய அலுவலர் மற்றும் ஊழியர்கள் குன்னூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போது பலாப்பழ சீசன் ஆரம்பமாகியுள்ள நிலையில் ரயில் நிலையம் அருகில் பலாப்பழம் மரங்களில் பழங்கள் காய்த்துள்ளதால் யானைகள் அங்கு முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வெள்ளியங்கிரியில் சாலையை மறித்த 2 காட்டு யானைகள்!

Last Updated : Jun 9, 2022, 7:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details