தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டெருமை தாக்கியதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

குன்னூரில் காட்டெருமை தாக்கியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் பலத்த காயமடைந்த நிலையில் அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

காட்டெருமை
காட்டெருமை

By

Published : Feb 9, 2022, 4:35 PM IST

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்துவருகின்றன. இவை அடிக்கடி குடியிருப்புப் பகுதி, வேளாண் நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவருவது வாடிக்கையாக இருந்துவருகிறது.

குறிப்பாக யானை, காட்டெருமை, காட்டுப் பன்றி போன்ற விலங்குகள் பயிர்களைச் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

காட்டு எருமை தாக்கியதில் ஒருவர் காயம்

இதில் குறிப்பாக அடிக்கடி வன விலங்குகள் சாலையைக் கடந்துவருவதால் சாலைகளில் செல்லக்கூடிய நபர்களைத் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

இதனிடையே குன்னூர் அருகேயுள்ள பழைய அருவங்காடு பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த பூர்ணபகதூர் என்பவர் நேற்று (பிப்ரவரி 8) தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை, சாலையில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த காட்டெருமை தாக்கி தூக்கி வீசியது.

இதனால், பலத்த காயமடைந்த பூர்ணபகதூரை குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இதில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச அளவில் ஹிஜாப்...! - அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா அதிர்ச்சி

ABOUT THE AUTHOR

...view details